Wednesday, November 6, 2013

நீயா- நானா ?


தன்முனைப்பினால் (EGO) எழும் விளைவுகள்

  சில மாதங்களுக்கு முன்பாக THE HINDU ஆங்கில நாளிதழில் முதன்மை ஆசிரியர் மற்றும் நிர்வாக குழுமத்தில் திரு என்.ராம்-ற்கு பதிலாக திரு சித்தார்த் வரதராஜன் பொறுப்பேற்றபின் சில நாட்களில் செய்திகளின் அச்சு வடிவமைப்பில் (LAY OUT - DESIGNING - PROVIDING SHORT CAPTIONS)குறிப்பிட்ட தலைப்புகளுக்கு பக்கத்தில் கலர் கட்டத்தில் குறியீட்டுச் சொல் குறித்து காண்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.  சில வடிவமைப்பு மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டது.  பலரால் அது வரவேற்கப்பட்டது.  ஒரே மாதிரி பார்த்துப் பழகிய சிலர் எதிர் கருத்தும் தெரிவித்தனர்.
 
  ஆனால் அதற்கு முன்பு- அன்று- இன்று எல்லா நாட்களிலும் செய்தியாளர்களில் மாற்றம் ஏதும் இல்லாததால் ஆங்கில எழுத்து நடைகளில் மாற்றமின்றி சிறப்பாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  இந்நிலையில் சமீபத்தில் முதன்மை ஆசிரியர் குழுமத்தில் திரு என்.ராம் பொறுப்பேற்று- அதனை தொடர்ந்து திரு சித்தார்த் வரதராஜன் ராஜினாமா போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளது.  அது அவர்களின் உள் நிகழ்வு விவகாரம்.
 
  ஆனால் இன்றைய THE HINDU முதல் பக்கம் வலது மூலையில் "மீண்டும் பழைய பொலிவான வடிவமைப்பிற்கு திரும்பியுள்ளோம்" என கட்டம் கட்டி  குறிப்பிடப்பட்டுள்ளது.

  ஆட்சியமைப்பை, துறைவாரியான நிர்வாகத்தை, நீதித்துறையை இப்படி எவருடைய செயல்பாட்டையும் விமர்சிக்கும் தகுதிபடைத்த பத்திரிகையாளர்களிடையே இப்படி தனி மனித "தன் முனைப்பு (ஈகோ)" தலைதூக்கி முன்பிருந்தவர் செய்ததையெல்லாம் மாற்றுவேன் என தலைப்பட்டால், 5 வருடங்களுக்கொருமுறை ஆட்சி மாற்றத்தின் போது முன்னவர் செய்த பெரும்பாலான கொள்கை முடிவுகளை புதிய ஆட்சியாளர்களால் மாற்றப்படும் போது அதை எவ்வாறு விமர்சனம் செய்ய இயலும்?

  இந்து நாளிதழின் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்ய விரும்பினால் செய்துவிட்டு போயிருக்கலாம்.  அதை கட்டம் கட்டி சொல்லி காண்பிக்கும் போது "தன் முனைப்பு (ஈகோ)" வெளிப்படையாக தெரிகிறது. "இடது" சிந்தனையாளர் என எண்ணப்படும் மூத்த பத்திரிகையாளரிடம் இது வெளிப்படுவது வேதனைக்குரிய ஒன்றே !!

7 comments:

ஜோதிஜி said...

இது போல வித்தியாசமான தகவல்களுடன் தொடர்ந்து எழுதுங்க. பகிர்ந்து கொள்கின்றேன்.

எஸ் சம்பத் said...

ஊக்குவித்தலுக்கு நன்றி

cheena (சீனா) said...

அன்பின் சம்பத் - தேவையற்ற ஒரு ஈகோ பிரச்னை - கட்டம் கட்டிக் கூற வேண்டிய அவசியமில்லை. - ம்ம்ம்ம் - பொறுத்திருந்து பார்ப்போம் - மாற்றங்கள் எப்படி இருக்கின்றன என்று - நல்லதொரு பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown said...

தன்னிடம் உள்ள தன்முனைப்பை வெல்ல முடியாதவன் ,அடுத்தவரின் தன்முனைப்பை விமர்சனம் செய்ய முடியாது ,அதுவும் பத்திரிக்கை ஆசிரியராய் இருப்பவர் அடக்கியே வாசித்து இருக்கலாம் !

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

தன்னிடம் உள்ள தன்முனைப்பை வெல்ல முடியாதவன் ,அடுத்தவரின் தன்முனைப்பை விமர்சனம் செய்ய முடியாது ,அதுவும் பத்திரிக்கை ஆசிரியராய் இருப்பவர் அடக்கியே வாசித்து இருக்கலாம் !

வல்லிசிம்ஹன் said...

ஈகோ.

சாம்ராஜ்யங்களுக்கே சோதனை தரும் விஷயம். நல்ல பதிவு.