Monday, August 9, 2010
உள்ளே… வெளியே…
தோளில் துண்டு
தொனியில் கோபம்
தகிக்கும் சூடு
தலைவரின் பேச்சு
தினமொரு ஆர்ப்பாட்டம்
தெருவெங்கும் விளம்பரம்
தொழிலாளர்கள் சிலரின்
விடுப்பை மறுத்த
மேலாளர் முன்சென்று
அவசர வேலை
இயலாமை சூழல்
ஈன்றவர் வயோதிகம்
உற்றார் இறப்பு
பெண்ணின் பேறுகாலம்
எதிர்பாரா இடர்பாடு -என
விடுப்பு எடுப்பது
தவிர்க்க இயலாது
விடுப்பை மறுத்து
சம்பளம் பிடித்தால்
போராட்டம் வெடிக்கும்
தலைவரின் வேகமான
முழக்கத்தின் முடிவில்
“பெரிய சங்கம்”
நமக்கேன் வம்பென
மறுத்த விடுப்பு மனுக்களில்
மேலாளர் ஒப்பமிட
தலைவர் வாழ்கவென
தொழிலாளர் வாழ்த்துடன்
இரவு உணவிற்கு
இல்லம் திரும்பிய தலைவர்
“முனியம்மா” வரவில்லை
முழுதினமும் கடும் வேலை
சமைக்கவோ நேரமில்லை
சாப்பாடு வாங்கிவா -என
சகதர்மினி உத்திரவிட
அடிக்கடி விடுப்பா
அவளின் சம்பளத்தைப்பிடி
வழிக்கு வருவாள் தானாக
கட்டளையாய் முழங்கிவிட்டு
கடைக்குத்தான் புறப்பட்டார்
தொழிற்சங்க தலைவரும்
தூக்குவாளி கையிலெடுத்து..
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
'ஊருக்குத்தாண்டி உபதேசம் கதை' தெரியுமல்லவா?
எங்கும் அதே!
சொல்லவந்ததை சிறப்பா சொல்லியிருந்தாலும் ஒரு கோர்வை இருக்கிறதா என்பதை அடுத்த முறை ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.
தொடர்கின்றேன்.
நன்றி தருமி சார் - வழக்கம் போல உடனடி கருத்திற்கு நன்றி ஜோதிஜி
இப்போது blogger ல் அப்டேட் ஆகின்றது.
முதல் வெற்றி.
தொடருங்கள்.
Post a Comment